10 ரூபாய்க்கு ரிசார்ஜ் கூப்பன் வாங்கி சேவை வரி கட்டும் கூலி ஆட்கள்
இருக்கும் இந்த நாட்டில் கோடி கணக்கில் சம்பாதிக்கும் நடிகர் நடிகைகளால்
சேவை வரி கட்ட முடியாதம். என்ன கொடும சார் இது.
Wednesday, 9 January 2013
Tuesday, 8 January 2013
குற்றவாளிகள் சார்பில் ஆஜராகும் வக்கீலுக்கு எதிர்ப்பு: டில்லி கோர்ட்டில் பரபரப்பு
புதுடில்லி: டில்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக ஆஜராகும் வக்கீலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மற்ற வக்கீல்கள் கோஷம் எழுப்பியதால் சாகட் கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
டில்லியில் கடந்த டிசம்பர் 16ம் தேதி மருத்துவ மாணவி ஒருவர், ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக, 6 பேர் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கு டில்லி சாகட் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில், குற்றவாளிகள் 6 பேரையும் நேரில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டதையடுத்து அவர்கள் அனைவரும் இன்று கோர்ட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது அவர்கள் வந்த போலீஸ் வேனை வழிமறித்த டில்லி வக்கீல்கள், அவர்கள் சார்பாக ஆஜராகும் எம்.எல். சர்மாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
Subscribe to:
Posts (Atom)